உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பும் பணிகளில் திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தீவிரம்
Tirupur News- கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை (கோப்பு படம்)
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகரகூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ம் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbtiruppur.net என்ற இணைய தளம் வாயிலாக 1.12.2023 அன்று மாலை 5.45 மணிவரை வரவேற்றப்படுகின்றன. இதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 24-ம் தேதி காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருப்பூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.
இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சியாகும்.புனேயில் உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை ( கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்ற
இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சியாகும்.புனேயில் உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை ( கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 -ஆம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு ( Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியற்கான ரசீதை திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணை தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்
முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவுகணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ்போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும்.
வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும். எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுகான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்ப தாரர்கள் எழுத்து தேர்விலும், நேர்முக தேர்விலும் பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்றி முறை, அவர்கள்தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் www.drbtiruppur.net வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu