திருப்பூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி பொறுப்பேற்பு

திருப்பூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி பொறுப்பேற்பு

Tirupur News. Tirupur News Today-புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சாமிநாதன், பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சாமிநாதன் பொறுப்பேற்றார்.

திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணியாற்றிய ஷசாங் சாய் விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பாதுகாப்பு பிரிவு போலீஸ் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சாமிநாதன் நேற்று, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பை நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி கல்லூரியில் படித்து, அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளர்.

கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு போலீஸ் நேரடி டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சென்னை அண்ணாநகரில் உதவி ஆணையாளராக பணியாற்றினார். 2007-ம் ஆண்டு போலீஸ் ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று, பாதுகாப்பு பிரிவிலும், விருதுநகர் மாவட்ட போலீஸ் ஏ.எஸ்.பி ஆகவும் பணியாற்றினார். 2012-ம் ஆண்டு போலீஸ் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை கமிஷனராகவும், அதன்பிறகு மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்.பி ஆகவும் பணியாற்றினார்.

அதன்பிறகு சென்னை போக்குவரத்து துணை கமிஷனராகவும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையிலும் பணியாற்றி 2021-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு பிரிவு போலீஸ் எஸ்.பி ஆக பணியாற்றியுள்ளார். புதிதாக, திருப்பூர் மாவட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன், 'மாவட்டம் முழுவதும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.' என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story