திருப்பூர் மாவட்ட நீதிபதிகள் மாற்றம்: ஐகோர்ட் தலைமை பதிவாளர்

திருப்பூர் மாவட்ட நீதிபதிகள் மாற்றம்: ஐகோர்ட் தலைமை பதிவாளர்
X

பைல் படம்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து ஐகோர்ட் உத்தரவு.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து ஐகோர்ட் தலைமை பதிவாளர் தனபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்ன ஐகோர்ட் தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன் கிருஷ்ணகிரி குடும்பநல கோர்ட் நீதிபதியாகவும், காங்கயம் நீதிபதி ராஜா வாணியம்பாடிக்கும், பல்லடம் நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி காங்கயத்திற்கும், காங்கயம் ஜூடிசியல் மாஜிஸ்திேரட்டு பிரவீன் குமார் சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கும், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆதியன் சங்கராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
சிக்கன் , மட்டன் எதுக்கு...? கால் கிலோ சுண்டல் போதுமே..! அந்த ரகசியம் தெரியுமா...?