திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களில் தொகுப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today-திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவருக்கு 12 ஆண்டுகளும், 2 பேருக்கு 9 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளிக்கப்பட்டது.

திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் பூலுவபட்டி திருநகரைச் சோ்ந்த அரவிந்த் (வயது 24), பாலாஜி (21), மும்மூா்த்தி நகரைச் சோ்ந்த யுவராஜ் (24), உதகையை சோ்ந்த தினேஷ் (22) ஆகியோா் அவிநாசி, பெருமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டது தொடா்பாக அவிநாசி போலீசாரால் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி ஷபீனா, வழக்கில் தொடா்புடைய யுவராஜுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதமும்,பாலாஜி, தினேஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 32) என்பவருக்கும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அருகே உள்ள வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமேகலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டுள்ளார். அதனை யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களை தகாத வார்த்தைகளில் பேசிய இரு வாலிபர்கள் கைது

பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரையும், அவரது 17 வயது மகளையும் பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் கோபி என்கிற காளீஸ்வரன்(வயது26) ,கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுபாஷ்(26) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும், இதனை தட்டிக்கேட்ட அவரது தாயாரையும் கெட்ட வார்த்தைகளில் அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோல் பலமுறை நடந்ததால் பயந்து போன அவர்கள் இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 2 வாலிபர்களையும் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதுசூதன் பிரதான் என்பவரது மகன் தவன்குமார் பிரதான்( வயது 26) .இவர் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்துக் கொண்டு, அதே பகுதியில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து மன வேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி சுமித் ஜனா, வீட்டிற்கு திரும்பிய போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் - பக்கத்தினர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுமித் ஜனா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுபானம் விற்றவர் கைது

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கழுவேறிபாளையம், காலனியை சேர்ந்த நாச்சி என்பவரது மகன் கோவிந்தன் (வயது70). இவர் முறைகேடாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கோவிந்தனிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த சீரங்கன் என்பவரது மகன் சுதாகர் ( வயது 29), கார் டிரைவர். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே தனக்குத்தானே தூக்கு போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!