திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே கடையின் மேற்கூரையை பிரித்து 15 செல்போன்கள், மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது. திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

செல்போன் கடையில் திருட்டு; போலீசார் விசாரணை

Tirupur News,Tirupur News Today- காங்கயம், முத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 37). இவர் காங்கயம், திருப்பூர் சாலை, படியூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கியது, கடையில் இருந்த 15 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் பாஸ்கர் புகார் அளித்தார். காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். படியூர் பகுதியில் மேற்கூரையை பிரித்து செல்போன் கடையில் செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் சிறுமி உயிரிழப்பு

திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவரது தம்பி வேல்முருகன் (43). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்கள் தங்களது குடும்பத்தினர் 9 பேருடன், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு காரில் செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு ஊரிலிருந்து புறப்பட்டனர். இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரை அடுத்த மில் காலனி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதியது.

இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ராஜேந்திரனின் மகள் கிருஷிகா அனு (8), வேல்முருகனின் மகன் யஸ்வின் (10) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 6 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக கிருஷிகா அனுவை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த யஸ்வினுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

திருப்பூர் இ்டுவம்பாளையம் பகுதியில் கோர்ட்டு உத்தரவுப்படி வீடு ஜப்தி செய்யப்பட்டதால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் வீரபாண்டி அருகே இடுவம்பாளையம் பகுதியில் தோட்டத்துச் சாளையில் வீடு கட்டி வசித்து வருபவர் எஸ்.எம்.ராஜூ (வயது 49). இவர் வசித்து வரும் வீடு வேறு நபருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாக கோர்ட் தீர்ப்பளித்த நிலையில், அந்த இடத்தை சுவாதீனப்படுத்தி ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கோர்ட் அமீனா அமல்ராஜ் தலைமையிலான கோர்ட் ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ராஜு வசித்து வரும் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது மனைவி மாலதி மற்றும் குழந்தைகள் தனியாக இருந்த நிலையில், கோர்ட் ஊழியர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜூ ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பொருட்களை எங்கே எடுத்துச்செல்வது என்று தெரியாமல் அங்கேயே கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாலை அந்த இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக மீண்டும் அதிகாரிகள் வந்தனர். அப்போது கம்பி வேலி அமைக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது திடீரென ராஜுவின் மனைவி மாலதி அந்த தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
business ai microsoft