திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு (மாதிரி படம்)

Tirupur News. Tirupur News Today- பல்லடம் பகுதியில், மீன்கடையில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, மீன் வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.

மதுபானம் விற்ற மீன் வியாபாரி கைது

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அருகே உள்ள கள்ளகிணர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கள்ளகிணர் தனியார் நூற்பாலை அருகே மீன் கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த மீன் கடையில் தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரது மகன் அம்மு(வயது 22) என்பவரை கைது செய்தனர். மீன் கடைக்குள் பதுக்கி வைத்திருந்த 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

பைக் திருடிய வாலிபர் கைது

அவிநாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வருபவர் வெம்புடி (வயது 27). இவர் தனது பைக்கை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் வேலை முடித்து இரவு வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதையடுத்து அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பைக்கை திருடிய மடத்துக்குளத்தைச் சேர்ந்த முருகநாதன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

‘போக்சோ’ சட்டத்தில் வாலிபர் கைது

முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் (வயது 24). இவர் கூலித் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பனியன் கம்பெனி டெய்லர் தற்கொலை

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சக்தி நகரில் வசித்தவர் குமரேசன்(வயது 42) . இவருடன் மனைவி சத்யா மற்றும் மகன், மகளும் வசித்தனர். குமரேசன், அருகே உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மின்விசிறியில் தூக்கு போட்டு உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, குமரேசன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

சமையல்காரர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் உஜகார் சிங்(37). இவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வந்தார். ஊருக்குச் சென்று வந்த பின்பு, சோகமாகவே காணப்பட்ட அவர், நேற்று காலை வேலைக்கு வரவில்லை. இதையடுத்து உடன் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர்,அங்குள்ள பனியன் நிறுவன விடுதியில் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, உஜகார் சிங் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே கிடந்துள்ளார். இதையடுத்து அவரை திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உஜகார் சிங் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம், கல்லக்குடி பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவரது மகன் மகாலிங்கம்(42). இவர் பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் கார் ஒர்க் ஷாப்பில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாதபோது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற ஒர்க் ஷாப் உரிமையாளர் குணசேகரன் திரும்பி வந்தபோது, மகாலிங்கம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

பைக்கில் இருந்த ரூ. 2 லட்சத்தை ‘லபக்’ கிய வாலிபர் கைது

அவிநாசி அருகே உள்ள காசிகவுண்டன்புதூரில் ராயன்கோவில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). இவர் கால்நடை மருத்துவமனை அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நண்பரிடம் இருந்து ரூ.2 லட்சம் வாங்கி வந்து தனது பைக்கில் வைத்து பூட்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, பைக்கில் இருந்த பணம் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பழங்கரை அருகே போலீசார் வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போது, போலீசாரை பார்த்து பைக்கில் வந்த ஒருவர் தப்ப முயன்றார். இதை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் பவானிசாகர் பகுதியை சேர்ந்த ரத்தினசாமி மகன் கண்ணன் என்கின்ற கவியரசு (வயது 21) எனத் தெரிய வந்தது. அவர் சுரேஷின் இரண்டு லட்ச ரூபாயை திருடியதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கவியரசுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை மீட்டு, அவர் ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் கைது

மடத்துக்குளம், கடத்தூரைச் சேர்ந்தவர் அப்பு குட்டி என்கிற ஈஸ்வரன் (வயது 35).இவர் குமரலிங்கத்தில் கூலித் தொழிலாளி. ஈஸ்வரன் நேற்று முன் தினம் வழக்கம்போல் அமராவதி பகுதிக்கு கூலிவேலைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது கல்லாபுரத்தைச் சேர்ந்த 13 மற்றும் 8 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் (அண்ணண்,தம்பி) அவர்களது வயலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த ஈஸ்வரன் இரண்டு சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.மேலும் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி, பைக்கில் அழைத்துக்கொண்டு அமராவதி முதலைப் பண்ணைக்கு அருகே உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார். பின்னர் அவர்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அடித்ததுடன், பாலியல் தொந்தரவுக்கும் உட்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால், கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம் இரவு, பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்களது தந்தை உடுமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ஈஸ்வரனை கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்