திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

வெள்ளகோவிலில், நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன. 

Crime News in Tamil -பல்லடம் அருகே நடந்த வாகன விபத்தில், பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

Crime News in Tamil -விபத்தில் இருவர் பலி:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70)., அதே ஊரைச் சேர்ந்த சவுண்டப்பன் என்பவரது மகன் சக்திவேல் (40) ஆகிய இருவரும், கணபதிபாளையத்தில் இருந்து மோட்டார் பைக்கில் வாவிபாளையம் அருகே உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அவர்கள் வாவிபாளையம் பகுதியில் சென்றபோது, தோட்டத்திற்குள் இருந்து மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு பொக்லைன் வாகனம் ஒன்று திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் ஏறியது. பொக்லைன் எந்திரத்தில் கட்டப்பட்டிருந்த மின்கம்பங்கள் பொக்லைனை கடந்து முன்னால் நீண்டு கொண்டிருந்தது. மின் கம்பத்துடன் பொக்லைன் பிரதான சாலைக்கு திடீரென்று வந்ததால், பொக்லைன் இயந்திரம் மீது பயங்கரமாக மோதியது. இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் உயிரிழந்தனர். காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஏழு ஆடுகள் பலி:

வெள்ளகோவில் 19-வது வார்டு கவுன்சிலர் நளினி கார்த்திகேயன். இவர் தனது தோட்டத்தில் 40 ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்க்கிறார். இரவு வழக்கம் போல், ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டது. பின்னர், காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, 2 பெரிய ஆடுகள், 5 குட்டி ஆடுகள் உயிரிழந்தது. 3 ஆடுகள் காயங்களுடன், உயிருக்கு போராடியது. நள்ளிரவுநேரம் பட்டிக்குள் புகுந்த நாய்கள், அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பட்டிக்கு வந்து பார்வையிட்டனர். ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறுகையில், பயிர்களை மயில்கள், மான்கள் சேதம் ஏற்படுத்துகிறது, தோட்டத்தில் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருகிறது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் நிலையில், வாழ்வாதாரமாக விளக்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொல்வது கவலை அளிக்கிறது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் கடித்து சாகும் ஆடுகளுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு:

திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பை அடுத்த, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி ருக்குமணி (வயது 69). இவர் காலையில், வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர், திடீரென ருக்குமணி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டார். ஆனால் மர்ம நபர், நொடிப்பொழுதில் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பாலியல் தொல்லை செய்தவர் 'போக்சோ'வில் கைது:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ் பிரசாத் (வயது 44). இவர் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தந்தை, பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 'போக்சோ' சட்டத்தில் மகேஷ் பிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

ஓட்டல் ஊழியர் பலி:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுாகா மேக்கலாந்துறையை சேர்ந்தவர் இளஞ்செல்வன்(வயது 35). இவர் வெள்ளகோவிலில் தங்கி, முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்தார். நேற்று அதிகாலை, முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வாகனம், இளஞ்செல்வன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் இளஞ்செல்வன் பலத்த அடிபட்டு, அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் இறந்த இளஞ்செல்வனுக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

நகை, செல்போன் திருடிய வாலிபர் கைது:

திருப்பூர் சேரன் தொழிலாளர் காலனியை சேர்ந்தவர் இளமுருகு (வயது 52). இவர் தனது குடும்பத்துடன், கடந்த ஜனவரி 25-ம் தேதி திருப்பூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். திருப்பூரில் ரயில் ஏறியதும், அவரது கைப்பையை காணவில்லை. அதில் 1 செல்போன், ஒரு பவுன் தங்க நகை இருந்தது. இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு டிக்கெட் மையத்தில், பீகாரை சேர்ந்த தீபக்குமார் (47) என்பவர், படிவத்தை பூர்த்தி செய்தபோது, அவரது செல்போன் மாயமானது. அவரும், ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். இந்தநிலையில், இந்த திருட்டுகளில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவரை ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil