மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க திருப்பூர் கலெக்டர் அழைப்பு

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க திருப்பூர் கலெக்டர் அழைப்பு
X

Tirupur News- மஞ்சப்பை விருது பெற அழைப்பு (கோப்பு படம்)

Tirupur News- நெகிழி இல்லாத வளாகமாக மாற்றும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

Tirupur News,Tirupur News Today - நெகிழி இல்லாத வளாகமாக மாற்றும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நெகிழி இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபா் அல்லது நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் 2 ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business