திருப்பூா் புத்தகத் திருவிழா இன்று மாலை தொடக்கம்; பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கிறது

திருப்பூா் புத்தகத் திருவிழா இன்று மாலை தொடக்கம்; பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கிறது
X

Tirupur News- திருப்பூரில் புத்தக கண்காட்சி இன்று மாலை துவங்கி, வரும் பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கிறது. (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூரில் 20வது புத்தகத் திருவிழா இன்று மாலை துவங்குகிறது. வரும் பிப்ரவரி 4ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சாா்பில் 20-வது புத்தகத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) (ஜனவரி 25) மாலை தொடங்குகிறது.

தமிழக அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சாா்பில் புத்தகத் திருவிழா வேலன் ஓட்டல் வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு ஆட்சியா் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறாா்.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைக்கின்றனா்.

இதைத்தொடா்ந்து, தினசரி மாலை 6 மணி அளவில் சிறப்பு கருத்தரங்கம், இசையரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணி அளவில் ‘நிற்க அதற்குத்தக’ என்ற தலைப்பில் இலக்கியச் சுடா் த.ராமலிங்கம், ஜனவரி 26-ம் தேதி ‘எரிக தீ எழுக தீ’ என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா், ‘நோ்படப் பேசு’ என்ற தலைப்பில் எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் ஆகியோா் பேசுகின்றனா்.

ஜனவரி 27-ம் தேதி ‘நாமே ஒரு கதைப்புத்தகம்’ என்ற தலைப்பில் ம.மணிமாறன், ‘பூமிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ என்ற தலைப்பில் கோவை சதாசிவம், ஜனவரி 28-ம் தேதி ‘கீழடி சொல்லும் தமிழின் தொன்மை’ என்ற தலைப்பில் தொல்லியல் துறை கண்காணிப்பாளா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா ஆகியோா் பேசுகின்றனா்.

ஜனவரி 29-ம் தேதி பேராசிரியா் சுப.மாரிமுத்து நடுவராகப் பங்கேற்கும் இன்னிசைப் பாட்டரங்கம் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் திறானய்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு ஆகியோா் பரிசு வழங்கிப் பேசுகின்றனா்.

ஜனவரி 31-ம் தேதி ‘பெண்மொழி யென்னும் புதுசூரியன்’ என்ற தலைப்பில் ஆண்டாள் பிரியதா்ஷினி, ‘திருப்பூரும் காந்தியும்’ என்ற தலைப்பில் அனிதா கிருஷ்ணமூா்த்தி, பிப்ரவரி 1 -ம் தேதி ‘இனியவை காண்க’ என்ற தலைப்பில் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆகியோா் பேசுகின்றனா்.

பிப்ரவரி 2 -ம் தேதி ‘இயற்கை: நாம் கற்றது என்ன’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பா்கள் கோ.சுந்தர்ராஜன், அயலான் திரைப்பட இயக்குநா் ஆா்.ரவிக்குமாா், பிப்ரவரி 3 ம் தேதி ‘பெருமை மிகு திருப்பூா் வாழி’ என்ற தலைப்பில் புலவா் செந்தலை ந.கவுதமன் ஆகியோா் பேசுகின்றனா்.

பிப்ரவரி 4-ம் தேதி மா.ராமலிங்கம் தலைமையில் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்குக் காரணம் கருத்து வளமா? கற்பனைத் திறனா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி