திருப்பூரில் கொரோனா பாதித்த சகோதரர் சிகிச்சைக்கு அமைச்சர் காலில் விழுந்த வாலிபர்

திருப்பூரில் கொரோனா பாதித்த சகோதரர் சிகிச்சைக்கு அமைச்சர் காலில் விழுந்த வாலிபர்
X

சகோதரன் கொரோனா சிகிச்சைக்காக அமைச்சர் காலில் விழுந்த வாலிபர்.

திருப்பூரில் தனது சகோதரன் கொரோனா சிகிச்சைக்காக அமைச்சரின் காலில் விழுந்து வாலிபர் கெஞ்சினார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இறப்பு விகிதம் 300 தாண்டியது. பாதிப்பு எண்ணிக்கையும் 45 ஆயிரத்தை கடந்து செல்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலம்பாளையம் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, குமரன் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., சுப்பராயன் மற்றும் கலெக்டர் விஜய் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் சாமிநாதனிடம், வாலிபர் ஒருவர் தனது சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பல மணிநேரமாக காத்திருப்பதாகவும், ஆக்சிஜன் வசதியுடன் கூடி படுக்கை வசதி இல்லாததால் இன்னும் அனுமதிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறினார். தனது சகோதரை உடனடியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையில் அனுமதிக்க வேண்டும் என கூறி திடீரென அமைச்சரின் காலில் விழுந்தார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து அவரது சகோதரருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆம்புலன்ஸ் வசதியுடன் குமரன் கல்லூரியில் காலியாக உள்ள படுக்கையில் அனுமதிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags

Next Story