தவறான ஆபரேஷன் தொழிலாளி புகார்

தவறான ஆபரேஷன் தொழிலாளி புகார்
X

பனியன் கம்பெனி தொழிலாளி மணி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணி (32). பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வேலை முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று போது தவறி கீழே விழுந்தார். இதில், அவரின் இடது கை தோல்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார், அவருக்கு சில்வர் பிளேட் பொறுத்தி ஆபரேஷன் செய்யப்பட்டது. அபரேஷன் தையல் போடப்பட்ட இடத்தில் புண் ஆறாமல் இருந்தது. நாளடைவில் பிளேட் வெளியில் தெரிய ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார். ஆபரேஷன் செய்த டாக்டர்களின் கவன குறைவால், இதுபோன்ற தவறு நடந்துள்ளதாக மணி குற்றம்சாட்டி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!