திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதா பொறுப்பேற்றார்!

திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதா பொறுப்பேற்றார்!
X

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக, வனிதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக, வனிதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய வந்த கார்த்திக்கேயன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை ரயில்வே ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த வனிதா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக வனிதா, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக காவல் துறையினர் அளித்த மரியாதை அவர் ஏற்றுக்கொண்டார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண வனிதாவுக்கு, காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!