திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த   வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது
X

கோப்புப்படம்

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்னர்.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் தொழில் நகரமாக உள்ளதால், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலர் இங்கு வருகின்றனர். அதேபோல், சுற்றுலா விசாவில், திருப்பூருக்கு வரும், பல்வேறு நாட்டைச்சேர்ந்தவர்.

சிலர், நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். இதுபோன்ற நபர்கள் குறித்து, சோதனை செய்து பிடிக்கின்றனர். ஆவணமின்றி தங்கி உள்ளார்களா என்பது குறித்து மத்திய உளவுத்துறை போலீஸார் திருப்பூரில் சோதனை மேற்கொண்டனர்.

வங்கதேச நாட்டை சேர்ந்த சைபுல்இஸ்லாம், ஷிமூலகாஸி, மன்னன்மோல்லல் ஆகிய 3 பேர் உரிய ஆவணமின்றி தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்கள் மூவரை மத்திய உளவுத்துறை கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்