திருப்பூர் அருகே ரூ.80 ஆயிரம் திருடிய வாலிபர் கைது

திருப்பூர் அருகே ரூ.80 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
X
திருப்பூர் மங்கலம் பகுதியில் வீடு புகுந்து ரூ.80 ஆயிரம் திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி,49, விவசாயி. இவரது வீட்டில் கடந்த மாதம் 28 ம் தேதி ரூ.80 ஆயிரம் திருட்டுப்போனது. இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் லட்சுமி வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில். லட்சுமி வீட்டை பூட்டி, சாவியை ஜன்னல் அருகே வைப்பதை அவ்வழியாக சென்ற நபர் பார்த்து, லட்சுமி சென்ற பிறகு, சாவியை எடுத்து கதவை திறந்து, வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது.

வீடியோ பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில், மங்கலம் சத்யா நகரை சேர்ந்த பிரதீப், 21 தான் பணத்தை திருடினார் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!