திருப்பூர் மளிகைகடைக்காரர் வீட்டில்3 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை!

திருப்பூர் மளிகைகடைக்காரர் வீட்டில்3 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை!
X

திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஆர்கேவி நகரை அடுத்த அய்யன்நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர், தென்னம்பாளையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டை பூட்டி விட்டு மளிகை கடையில் தனது மனைவியுடன் தங்கி வந்தார்.

சம்பவத்தன்று, வீட்டுக்கு துரைசாமி வந்தபோது, வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3, பவுன் நகை மற்றும் ரூ.3.12 லட்சம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வீரப்பாண்டி போலீசாருக்கு துரைசாமி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!