திருப்பூர் மாநகராட்சியில் தொற்று பாதிப்பு 8.11% ஆக சரிவு: தடுப்பு நடவடிக்கைகளுக்கு கைமேல் பலன்!

திருப்பூர் மாநகராட்சியில் தொற்று பாதிப்பு 8.11% ஆக சரிவு: தடுப்பு நடவடிக்கைகளுக்கு கைமேல் பலன்!
X
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு 54% இல் இருந்து, 8.11% ஆக குறைந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. மாநகராட்சியில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ள நிலையில், கொரோனா நோய் தொற்றால் மாவட்டத்தில், 14 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 10 ஆயிரம் பேர் வரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 360 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்து உள்ளனர்.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த கடந்த மே மாதத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மட்டும், நோய் தொற்று எண்ணிக்கை 54 சதவீதமாக இருந்தது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு கட்டுப்பாடுகள், காய்ச்சல் கண்டறியும் முகாம், தடுப்பூசி முகாம் போன்றவை காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது நோய் தொற்று எண்ணிக்கை, 8.11 சதவீதமாக குறைந்துள்ளது.

இது குறித்து, திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக மே 24 ம் தேதி மாநகராட்சியில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை கடந்து சென்றது. கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் தினசரி 16 முதல் 20 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 2600 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையால், மாநகரில் கொரோனா பதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது என்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil