திருப்பூர் மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள்:கமிஷனர் ஆலோசனை

திருப்பூர் மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள்:கமிஷனர் ஆலோசனை
X

திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை நடத்திய மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்.

திருப்பூர் மாநகராட்சியில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணி, குடிநீர் பணி உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், மின்னஞ்சல் மனுக்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற பிரிவுகளுக்கான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் கமிஷனர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநகர பொறியாளர் ஜி.ரவி, செயற்பொறியாளர் எஸ். திருமுருகன், செயற்பொறியாளர் முகமது சலியுல்லா மற்றும் நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!