திருப்பூரை அச்சுறுத்தும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 2074 - பலி 34!

திருப்பூரை அச்சுறுத்தும் கொரோனா:  ஒருநாள் பாதிப்பு 2074 - பலி 34!
X
திருப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது; ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் முதன்முதலாக இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு, இரண்டாயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 34பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,500ஐ கடந்து சென்றது.
இந்த நிலையில், சுகாதாரத்துறையினர் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கொரோனா பாதிப்பு 2074, ஆகவும், இறப்பு எண்ணிக்கை 34 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரையில் 54, ஆயிரத்து524, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 38, ஆயிரத்து 59, பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 16, ஆயிரத்து 52, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 413, பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் 951, பேரும், ஆக்சிஜன் இல்லாமல்746, பேரும், ஐசியு-வில் 214, பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு ஆக்சிஜன் பெட், 109, ஆக்சிஜன் வசதி இல்லாத பெட், ஒரு ஐசியு.,பெட் ஆகியவை காலியாக உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!