திருப்பூரில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம்: 10% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி!

திருப்பூரில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம்:   10% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி!
X
திருப்பூரில் கொரோனா எண்ணிக்கை குறைகிறது 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. கடந்த மூன்று நாட்களாக கொரோனா பரவல் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அறிவித்த பட்டியலின்படி, இன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும்1,104, பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரேநாளில் 11, பேர் இறந்துள்ளனர். இதில், தாராபுரம் பகுதியில் 3, பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றை பொறுத்தவரையில் உடுமலை பகுதியில் 70, க்கும் மேற்பட்டவர்களும், மடத்துக்கும் பகுதியில் 30, க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 67, ஆயிரத்து100, பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.47, ஆயிரத்து798, பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தம்548, பேர் இறந்து உள்ளனர். இதுதவிர, மாவட்ட அளவில் இன்னும் 18, ஆயிரத்து 654, பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே, கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவித்தது. அதன்படி, 7, ம் தேதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், ஜாப் ஆர்டர் நிறுவனங்கள் 10, சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil