திருப்பூர் கலெக்டர் வினித் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்

திருப்பூர் கலெக்டர் வினித் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்
X

திருப்பூர் கலெக்டராக வினித் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டராக வினித் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த க.விஜய்கார்த்திகேயன், பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த வினித், திருப்பூர் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இவர், கேரளா சிவில் சர்வீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று கடந்த 2013 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 36 வது இடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் 7 வது கலெக்டராக வினித் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும்.

அரசின் மூலம் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்துக்கு அதிக அளவில் தடுப்பூசி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்