வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருப்பூர் கலெக்டர் ஆய்வு
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, அவினாசி, தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை, தென்னம்பாளையம் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயத்தில் 26 பேர்; திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடத்தில் தலா, 20, திருப்பூர் வடக்கு, உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில், தலா, 15; தாராபுரத்தில், 14; அவிநாசியில்,12 என, வேட்பாளர்கள் 137 பேர் களத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில், 23 லட்சத்து, 59 ஆயிரத்து, 804 வாக்காளர் உள்ளனர். அவர்களில், எட்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 798 ஆண்கள்; எட்டு லட்சத்து, 17 ஆயிரத்து, 255 பெண்கள்; 32 திருநங்கைகள் என, 16 லட்சத்து, 44 ஆயிரத்து,085 பேர் ஓட்டளித்துள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கையில் கலந்து கொள்ள உள்ள வேட்பாளர், ஏஜன்ட்கள், அலுவலர்கள் அனைவரும் நாளை காலை 7:15 மணிக்குள், வளாகத்திற்குள் ஆஜராக வேண்டும். காலை உணவை முடித்துக்கொண்டு 7:45 மணிக்கு, பணியாற்ற வேண்டிய டேபிள் முன் செல்ல வேண்டும்.
ஓட்டு எண்ணும் பணியில், 450 பேர் ஈடுபட உள்ளனர். 'மைக்ரோ அப்சர்வர்', தேர்தல் பார்வையாளரின் பிரதியாக, ஒவ்வொரு டேபிளையும் கண்காணிக்க உள்ளனர். தொகுதிக்கு தலா, 14 டேபிள்களில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும். தலா, இரண்டு டேபிளில், தபால் ஓட்டு எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu