திருப்பூரில் 28 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: அமைச்சர் தகவல்!
திருப்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த காட்சி.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். சென்னையில் ஏற்கனவே மிக பிரபலமாக இயங்கிக்கொண்டு இருக்கின்ற இன்நோவா கார் ஆம்புலன்ஸ்கள் திருப்பூரில் நாளை துவக்கி வைக்கிறார்.
திருப்பூர் பகுதியில் மக்களுக்கு தொற்று ஏற்பட்டவுடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவது அல்லது ஆய்வங்களில் இருந்து வீடுகளுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்பாட்டுக்கு 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு விடப்படுகிறது.
இந்த மாவட்டத்தில் பேரிடர் பணிகள் எந்த அளவுக்கு முடிக்கி விடப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்னும் 14 ஆயிரம் தடுப்பூசி கையிருப்ப உள்ளது. அதுவும் ஓரிரு நாளில் போடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 84.5 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை 95.59 லட்சம் தடுப்பூசி வந்து உள்ளது.
இன்னும் தடுப்பூசி போடுவதற்காக, 45 வயதுக்கு மேற்பட்டவர் 6 லட்சம் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 லட்சம் தடுப்பூசியும் கையிருப்பு உள்ளது. இந்த தடுப்பூசி எல்லாம் இன்னும் 2 , 3 நாட்களில் பயனாளிகளுக்கு போடப்பட உள்ளது.
மிக விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்படும். தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தற்போது 650 மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளது. திருப்பூரில் அரசு மருத்துவமனையில் ஒன்றும், தனியார் மருத்துவமனையில் 3 சென்டர் உள்ளது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 400 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பலர் வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 333 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் 2 பேர், அரசு மருத்துவமைனயில் 26 பேர் உள்ளனர். அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கட்டுப்படுத்த பகுதிகளில் வசிப்போருக்கு தேவையான மருத்துவ வசதி செய்யப்படுகிறது. மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. எச்.எல்., நிறுவனத்தில் தடுப்பூசி தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கொடுத்து, மருந்து தயாரிக்க துவங்கினால், நாம் மற்ற மாநிலங்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம், என்றார்.
பேட்டியின் போது செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் விஜய்கார்த்திகேயன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu