திருப்பூரில் தற்காலிக பணிகளுக்கு மாநகராட்சி ஆபீஸில் நேர்காணல்

திருப்பூரில் தற்காலிக பணிகளுக்கு   மாநகராட்சி ஆபீஸில் நேர்காணல்
X

திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் நேர்காணலுக்கு வரிசையில் நிற்கும் விண்ணப்பதாரர்கள்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய டாக்டர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன், சுகாதார ஆய்வாளர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (தகவல் உள்ளீட்டாளர்கள்) உள்ளிட்ட பணிகளுக்கு தலா 10 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இவர்களுக்கான நேர்காணல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் அசல் சான்றுடன் திருப்பூர் மாநகராட்சிக்கு வந்தனர். மாநகராட்சி மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட சுகாதார பிரிவு அதிகாரிகள், நேர்காணில் கலந்து கொண்டவர்களின் சான்றுகளை சரிபார்த்தனர். இதில் தகுதியானவர்கள் விரைவில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.


Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்