திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
X

திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமையில் இன்று நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்து இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சியின் 2050 ஆண்டின் மக்கள் தொகை, 19.50 லட்சம் இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப, மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள், அம்ரூத் திட்டத்தில் நடக்கிறது. இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகரை நவீனப்படுத்தும் வகையிலான பணிகள் நடக்கிறது.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் விவரம், தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமை வகித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளையும், அம்ரூத் திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாநகர பொறியாளர் ஜி.ரவி, செயற்பொறியாளர் முகமதுசலியுல்லா, நேர்முக உதவியாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil