திருப்பூர் - சேவா பாரதி சார்பில் ஆயுஷ் சிகிச்சை மையம் துவக்கம்

திருப்பூர் - சேவா பாரதி சார்பில்   ஆயுஷ் சிகிச்சை மையம் துவக்கம்
X

ஆர்எஸ்எஸ் சேவாபாரதி சார்பில், திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ள ஆயுஷ் கிளினிக்.

திருப்பூரில், சேவாபாரதி சார்பில், ஆயுஷ் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூரில், ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி மற்றும் ப்ரேரணா அறக்கட்டளை சார்பில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்களுக்கான பல்வேறு சேவை பணிகள். நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலை புற நோயாளிகள் பயன்பெறும் வகையில், அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள தி குவெஸ்ட் சர்வதேச பள்ளியில், ஆயுஷ் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஆயுஷ் மருத்துவத்தில் மட்டும் செயல்படும் இம்மையத்தில், ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, வர்மா ஆகிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஹோமியோபதி டாக்டர் கார்த்திக்பாபு, சித்தா டாக்டர் சர்ணயா, பாரம்பரிய வைத்தியர் பிரபாகரன் ஆகியோர், இங்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

இதன் துவக்க நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் திருப்பூர் கோட்ட அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், சேவாபாரதி மாவட்ட தலைவர் விஜயகுமார், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், லகு உத்யோக் பாரதி மாவட்ட தலைவர் கணேஷ், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், சேவா பாரதி மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்குமார், ஆர்எஸ்எஸ் திருப்பூர் கோட்ட இணை செயலாளர் மோகன்சுந்தரம், பள்ளி தாளாளர் கலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!