/* */

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி ஜவுளிகள் தேக்கம்

கொரோனா பொது முடக்கம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில்  ரூ.200 கோடி ஜவுளிகள்  தேக்கம்
X

கொரோனா லாக்டவுன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளிகள் தேங்கியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி கூடங்களில் மட்டும் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி தொழில் சார்ந்த பஞ்சாலைகள், நூற்பாலைகள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலை வேகமாகப் பரவி வருவதால் அனைத்து வர்த்தகமும், தொழில் நிறுவனங்களும் மீண்டும் முடங்கியுள்ளன. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ 200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேங்கியுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விசைத்தறியாளர்கள் கூறுகையில், .திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிரே காடா காட்டன் துணி, இந்தியாவில் மகாராஷ்டிரா, பாலி, பலோத்ரா, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி துறைமுகம் வழியே வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மொத்த வியாபாரிகள் துணி வாங்குவதை குறைத்து விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி மீட்டர் கிரே காடா துணி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் விசைத்தறியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 12 May 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!