திருப்பூர் மாநகராட்சியில் தெருவிளக்கு சரி செய்ய கட்டணமில்லாத தொலைபேசி எண் வெளியீடு
கட்டணமில்லா உதவி எண் மாதிரி படம்
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. பல்வேறு வார்டுகளில் தெருவிளக்கு பழுதாகி விடுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சரியான முறையில் தகவல் தெரிவிக்க முடியாத சூழ்நி்லை நிலவி வந்தது.
இப்பிரச்சினையை தீரக்கும் வகையில், கட்டணமில்லாத தொலைபேசி எண் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளதாவது:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தெரு விளக்கு சம்பந்தமான புகார்களுக்கு பிரத்தியேகமான கட்டணமில்லா தொலைபேசி எண்8508500000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் மூலம் புகார் பதிவிட்டால் அதற்கென பதிவு எண் புகார் செய்த கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், புகார்கள் சரிசெய்த பின்பு சேவை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்கு சம்பந்தமான அனைத்து புகார்களும் கண்காணிக்கப்படும், என தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu