திருப்பூரில் பொருட்கள் வாங்க குவிந்த பொது மக்கள்

திருப்பூரில்  பொருட்கள் வாங்க குவிந்த பொது மக்கள்
X

திருப்பூரில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

கொரோனா பரவல் காரணமாக திருப்பூரில் பொருட்கள் வாங்க பொது மக்கள் குவிந்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் 24 ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக வழக்கமாக நடைமுறையில் இருந்து இன்று (ஞாயிறு) ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. நாளை முதல் ஊரடங்கு என்பதால்,. இன்று(ஞாயிற்றுக்கிழமை) தினசரி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றார்கள்.

புது மார்க்கெட் பகுதி, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்ததால் நேரம் செல்ல செல்ல மக்கள் குவியத்தொடங்கினார்கள். மீன்கள் விற்பனையும் அதிகமாக இருந்தது. அதுபோல் இறைச்சி கடைகளிலும் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மளிகை கடைகள் அதிகம் உள்ளன. மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் கூட்டமாக வந்திருந்தனர். டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்து மது வாங்கினார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க வரிசையில் நின்று மது வாங்குவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினார்கள். மார்க்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.




Tags

Next Story