காப்பீடு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்

காப்பீடு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்
X
கொரோனாவுக்கு காப்பீடு திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை அரசு அறிவித்துள்ளது

தமிழகம் முழுவதும் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவ துவங்கி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுகைகள் நிரம்பி வழிகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் பலர், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் நேற்று 712 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவனைகளிலும் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறலாம் என அரசு அறிவித்து உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற விவரம் இல்லாததால், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் குழப்பமான நிலை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இருப்பினும், கொரோனாவுக்கு காப்பீடு திட்டத்தில் மாவட்டம் வாரியாக எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், அலமேலு பாலாஜி, ஹரிஸ்டா மெடிக்கல் சென்டர், ஏஆர்எஸ், பாலா ஆர்தோ, தீபா மருத்துவமனை, டாக்டர் சிவகானி, ஜெம் , கொங்கு ஹார்ட் சென்டர், எல்ஜி மெடிக்கல் சென்டர்,

உடுமலைபேட்டை லாவண்யா, மலர் பிரியா மெடிக்கல் சென்டர்,

தாராபுரம் நிவேதா, ஓ எம் எஸ், பல்லடம் பொன்னி, பிரியா ஆர்தோபெடிக், ராம்ஸ் மல்டிபெஷாலிட்டி சென்டர். ரேவதி மெடிக்கல் சென்டர்,

சோமனூர் எஸ்கே , ஸ்ரீ குமரன் , சுகுன்,சுகா மெடிக்கல் சென்டர்,திருப்பூர் கிட்னி சென்டர்,

தாராபுரம் வேல் ஆகிய மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags

Next Story