/* */

திருப்பூரை ஆட்டுவிக்கும் கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் நேரில் ஆய்வு

திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரை ஆட்டுவிக்கும் கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் நேரில் ஆய்வு
X

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், பல்வேறு தனியார் மருத்துவமனைகள், கொரோனா சென்டர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூரில் கொரோனா மிக வேகமாக பரவ துவங்கியை தொடர்ந்து, தனி அதிகாரி மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆக்சிஜன் படுக்கை வசதிகள் பற்றாகுறையால், ஒரே பெட்டில் இரண்டு பேர் சிகிச்சை பெறும் அவல நிலையும் உருவாகி உள்ளது.

இவ்வாறான நிலையில், திருப்பூரில் கொரோனா சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம், திருப்பூர் கொரோனா சிகிச்சை மையங்களில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், இன்று ஆய்வு செய்தனர்.

அப்போது, திருப்பூரில் போதிய அளவு ஆக்சிஜன் வசதி உள்ளதா, ஆக்சிஜன் படுக்கை வசதி போதிய அளவில் செய்யப்பட்டு உள்ளதா, கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டு உள்ளதா என்பதை கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் கலெக்டர் விஜய்கார்த்தியேன், எம்பி சுப்பராயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 29 May 2021 12:38 PM GMT

Related News