திருப்பூரில் மின் மயானங்களில் உடல் தகனம் நேரம் நீடிப்பு

திருப்பூரில் மின் மயானங்களில் உடல் தகனம் நேரம் நீடிப்பு
X

திருப்பூர் மாநகரில் கொரோனானால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து மின் மயானங்களின் பணி நேரம் நீடிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 35 பேர் வரை குணமடைந்து உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதேபோல், திருப்பூர் மாநகரத்தில் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

கொரோனா இறப்பு ஒரு பக்கம், இயற்றை மரணம் ஒரு பக்கம் என மின் மயானத்திற்கு செல்லும் உடல்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் திருப்பூர் வளம்பாலம் அருகில் உள்ள மின் மயானம், கருவம்பாளையம் ஏபிடி ரோட்டில் உள்ள மின் மயானம், அனுப்பர்பாளையம் ஆத்துபாலம் ரோட்டில் உள்ள மின் மயானம் ஆகிய மின் மயானங்கள் மூலமாக எரியூட்டப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தினசரி 10 உடல்கள் வரை எரியூட்டப்பட்டது. கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு மின் மயானத்திற்கும் 15 க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்ட கொண்டு வரப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்கும் வகையில், மின் மயானத்தை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், மின் மயானங்களின் உடல்களை எரிப்பதில் எந்த விதமான தாமதம் ஏற்படாமல் இருக்கும் வகையிலும், கட்டணம் விவரங்களை கண்காணிக்கவும் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். 4 உதவி கமிஷனர்கள், 4 சுகாதார அதிகாரிகள், 6 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் 3 மின் மயானங்களையும் கண்காணித்து வருகின்றனர் , மின் மயானங்களில் மாலை 6 மணி வரை உடல்கள் தகனம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக இரவு 9 மணி வரையும், தற்போது இரவு 10 மணி வரையும் உடல் தகனம் செய்யப்படுகிறது என்றார்.

Tags

Next Story