கொரோனா பரவல் அச்சம் தவிர்த்து மீன் வாங்க குவிந்த பொது மக்கள்

கொரோனா  பரவல் அச்சம் தவிர்த்து மீன் வாங்க குவிந்த பொது மக்கள்
X

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மீன் மார்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.

கொரோனா பரவல் அச்சமின்றி, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

கொரோனா அச்சமின்றி திருப்பூர் மீன் மார்க்கெட் மீன் வாங்க குவிந்த பொது மக்களால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில்ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் காலை 8 மணி வரை மட்டுமே செல்படும் என்பதால், மார்க்கெட்டில் மீன் வாங்க இன்று காலை 5 மணி முதலே, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் குவந்தனர்.

இதனால், மார்க்கெட்டில் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. மீன் மார்கெட்டில் கொரோனா அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் மக்கள் கூட்டம் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும், அரசு அதிகாரிகளும் மார்கெட்டில் இல்லாததால் மக்கள் அலைமோதினர். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 500 க்கு கீழ் சென்று உள்ளது. ஆனால், பொதுமக்கள் கவனக்குறைவாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் சர்வசாதாரணமாக கூட்டம் கூடுவது கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!