/* */

உயர்மின்னழுத்த கோபுரங்களால் பாதிப்பு : குழு அமைக்க அமைச்சரிடம் எம்பி கோரிக்கை

திருப்பூரில், உயர்மின்னழுத்த கோபுரங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய அமைச்சர் மெய்யநாதனிடம் எம்பி கணேசமூர்த்தி வலியுறுத்தினார்.

HIGHLIGHTS

உயர்மின்னழுத்த கோபுரங்களால் பாதிப்பு :  குழு அமைக்க அமைச்சரிடம் எம்பி கோரிக்கை
X

திருப்பூரில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம், உயர் மின்னழுத்த கோபுரங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து,  ஈரோடு எம்பி கணேசமூர்த்தி வலியுறுத்தினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருப்பூர் மாவட்டத்திற்கு துறைசார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

உயர்மின் அழுத்த மின்சாரத்தை கொண்டு செல்லும் போது, உயர்மின் கோபுரத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும், உழவர்களுக்கும், உயிரினங்களுக்கும், பாதிப்புகள் ஏற்படுகிறது. உயர்மின் அழுத்த கோபுரங்கள் வெளிப்படுத்தும் மின்காந்த அலைகளால் நீண்டகால, குறுகியகால உள்ளிட்ட 18 வகையான பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு, ஆய்வுக்குழு அமைத்து ஆராய வேண்டும் என்று, சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.


செய்தித்துறை அமைச்சர் மு‌.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அனைவருக்கும் "உயர்மின்கோபுரம் தவிர்ப்போம், வேளாண்மை காப்போம்" என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

Updated On: 3 July 2021 3:37 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு