திருப்பூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

திருப்பூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
X

திருப்பூரில் ரேஷன்கடையில் வழங்கப்படும் நிவாரணப்பொருட்களை எம்எல்ஏ.,செல்வராஜ் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமைமாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம்பருப்பு உள்ளிட்ட 14 வகையான கொண்ட நிவாரணத் தொகுப்பும், ரூ.2000 பணம் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மத்திய மாவட்ட பகுதிகளான கொங்கு நகர், ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் நிவாரணப்பொருட்களை எம்எல்ஏ.செல்வராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil