மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்
X

திருப்பூர் மாநகராட்யில் தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்யில் தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் 60 வார்டுகள் அமைந்துள்ளன. 60 வார்டுகளிலும் தூய்மை செய்யும் பணியில் 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 510 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் வலியுறுத்தி உள்ளது. ஆனால், 510 ரூபாய் வழங்கவில்லை. மேலும், கடந்த ஏப்ரல்,மே மாத சம்பளம் இன்னும் வழங்காததை கண்டித்து திருப்பூர் சிஐடியு தொழிற்சங்க தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பிறகு, கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!