திருப்பூர் மாவட்டத்தில்1.55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர் மாவட்டத்தில்1.55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1.55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 31 லட்சத்து 7 ஆயிரத்து 361 பேர் உள்ளனர். 18 வயதுக்குட்பட்டவர்கள் 8 லட்சத்து 86 ஆயிரத்து 841 பேரும், 18 வயது முதல் 44 வயதுக்குள் 13 லட்சத்து 87 ஆயிரத்து 436 பேர், 45 வயது முதல் 59 வயது வரை 4 லட்சத்து 83 ஆயிரத்து 195 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 889 பேரும் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பூசி மையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 55 ஆயிரத்து 30 பேருக்கும், 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 ஆயிரத்து 943 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 441 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது கொரோனா பாதிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுகிறது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 18 இடங்கள் என மொத்தம் 50 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.


Tags

Next Story