திருப்பூரில் கொரோனா பரவல் 50 சதவீதம் குறைந்தது

திருப்பூரில் கொரோனா பரவல் 50 சதவீதம் குறைந்தது
X
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள திருப்பூரில், தற்போது பாதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இரண்டு ஆயிரத்தை கடந்து சென்றது. அதேபோல், இறப்பு எண்ணிக்கையும் தினசரி 25, என்றளவில் இருந்து வந்தது. கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து, மாவட்டத்தை கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இது தவிர, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பரவலை தடுக்க, கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் பலனாக, திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைய துவங்கியது.

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையின்படி, திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1027,ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 11,பேர் இறந்து உள்ளனர். இதன் மூலம், ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50, சதவீதம் குறைந்து உள்ளது.

திருப்பூர் மாவட்டம்முழுவதும் இதுவரை 69, ஆயிரத்து 211, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49, ஆயிரத்து 765, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 567,பேர் பலியாகி உள்ளனர்.18, ஆயிரத்து 849, பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி