திருப்பூரில் குறைந்தது கொரோனா வேகம் : குறையவில்லை வெளியே திரிவோர் எண்ணிக்கை
கோப்பு படம்
திருப்பூரில், இன்றும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தேவையின்றி ஊர் சுற்றுவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக காணப்படுகிறது.
திருப்பூரில் கொரோன தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில், திருப்பூரில் 24,மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1338 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 8 ஆகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 62 ஆயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டு, 43 ஆயிரத்து 219 பேர் குணமடைந்துவீடு திரும்பி உள்ளனர். இன்னும் 18 ஆயிரத்து 594 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் இதுவரை 483 பேர் பலியாகி உள்ளனர்.
திருப்பூரில், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 2000 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருவது அதிகாரிகளுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இருப்பினும், தேவையின்றி ஊர் சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது.
தேவையின்றி ஊர் சுற்றினால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த போதிலும், சிலர் அடங்காமல் வெளியில் சுற்றி வருகின்றனர். பொதுமக்கள் தங்களுக்கு சுய கட்டுப்பாடு விதித்து, வீட்டுக்குள் இருந்தால் மட்டுமே தொற்று எண்ணிக்கையை முழுவதும் கட்டுப்படுத்த முடியும்; தொழில் நகராக திருப்பூர் மீண்டும் இயல்புக்கு திரும்பும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu