திருப்பூரில் 549 பேருக்கு கொரோனா -ஒருவர் பலி

திருப்பூரில் 549 பேருக்கு கொரோனா -ஒருவர் பலி
X

திருப்பூரில் மாவடடத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த 4 நாட்களாக கொரோனா 500க்கும் மேல் என்ற நிலையில் இருந்து வருகிறது. சுகாதார துறையினர் அறிவித்த இன்றைய பட்டியலில் திருப்பூரில் 549பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், ஒருவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூரில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்ட வண்ணம் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் 35ஆயிரத்து671பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.29ஆயிரத்து759பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 273பேர் பலியாகி உள்ளனர்.5639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags

Next Story