திருப்பூரில் கொரோனா பரவல் வேகம்

திருப்பூரில் கொரோனா பரவல் வேகம்
X

திருப்பூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2 வது அலையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 21 ஆயிரத்து 197 கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 19 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மாவட்டம் முழுவதும் 231 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீதியில் நடமாடும்போது முககவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!