திருப்பூரில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

திருப்பூரில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா  பாதிப்பு!
X
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார துறை அறிவித்த பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் 1573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் இறந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில் 80 பேருக்கும், உடுமலை பகுதியில் 80 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 ஆயிரத்து 237 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 8 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 173 பேர் ஐசியு பிரிவிலும், 818 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 285 பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!