திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைகிறது

திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைகிறது
X
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு இன்றும் சற்று குறைந்துள்ளது, பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 60 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை, 500 நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1373 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரே நாளில் 12 பேர் இறந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 60 ஆயிரத்து947 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 42 ஆயிரத்து 177 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 475 பேர் இறந்து உள்ளனர். 18 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1045 பேர் ஆக்சிஜன் படுக்கையிலும், 210 பேர் ஐசியு பிரிவிலும் சிகிச்சை பெற்று வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story