கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
X

திருப்பூர் கோவில்வழி முத்தணம்பாளையம் ரோட்டில் மார்ச் 25 ம் தேதி நல்லூர் போலீஸார் வாகன சோதனை செய்தனர். சோதனையில் 60 கிலோ கஞ்சா கடத்திய, மதுரை மாவட்டம் உசிலம்பட்டிகொளத்துப்படியை சேர்ந்த செல்வம்,31 என்பவரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைந்தனர். இவர் மீது திண்டுக்கல் நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளது. இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் பரிந்துரையில் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!