பிரதமர் மீது அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக சார்பில் திருப்பூர் போலீசில் புகார் மனு
பிரதமர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பூர் பாஜக சார்பில், காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவின் மாவட்ட தலைவர் நரேன் பாபு, வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட தலைவர் சண்முக வடிவேல் ஆகியோர், காவல்துறை ஆணையரிடம் வழங்கிய மனுவில், இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
மதுரை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணும், அவரது தந்தையும் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியை விமர்ச்சிக்கும் வகையில், பதாகையை ஏந்தியபடி சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வையும், கலவர எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி, கொரானா நோய் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் சூழலில், அது குறித்து அவதூறு கருத்து தெரிவித்து, பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி தொற்று பரவலுக்கு வழிவகுக்கின்றனர்.
எனவே, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் செயல்படும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu