திருப்பூர் மாவட்டத்துக்கு 13 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது

திருப்பூர் மாவட்டத்துக்கு 13 ஆயிரம் டோஸ்  கொரோனா தடுப்பூசி வந்தது
X
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், திருப்பூர் மாவட்டத்துக்கு 13 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டதால்தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து தமிழக சுகாதாரத்துறை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 920 டோஸ் ஒதுக்கப்பட்டு திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில் கூடுதலாக கேட்டு பெறப்படும்.

அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் என சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்