திருப்பூர் 125 பவுன் கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருப்பூர் 125 பவுன் கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது
X
திருப்பூர் 125 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி பகுதியை சேர்ந்தவர் சலியுல்லா,54இவர், பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 2ம் தேதி குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 125பவுன் நகை மற்றும் 25லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டது.

இந்த திருட்டு குறித்து வீரப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திருட்டு தொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பரத்குமார், மேட்டுபாளையத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம், கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம் மோகன் நகரை சேர்ந்த தீஷீக் (௨௬), கோவை மாவட்டம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48), கோவை குனியமுத்தூரை சேர்ந்த ராஜேஷ்,(37) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!