2 பெண்களிடம் 11 பவுன் வழிப்பறி..

Nallur Police Station
Nallur Police Station-திருப்பூர் மாநகர நல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட முத்தணம்பாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் மனைவி நித்யா,24. இவர் நேற்று முன்தினம் இரவு செரங்காட்டில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டு டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 8 மணி அளவில் வாய்க்கால் மேடு தனியார் பள்ளி அருகே வந்தபோது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள், நித்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
திருப்பூர் செட்டிபாளையம் சிவசக்திநகர் 2 வது வீதியை சேர்ந்த ராமர் மனைவி ராணி,48. இவர் இரவு 9 மணி அளவில் டூ வீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். தர்மலிங்கம் தோட்டம் எதிரே வந்தபோது, 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ராணி கழுத்தில் அணிந்து இருந்த 5.75 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இருவரும் கொடுத்த புகாரின் பேரில் நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu