எம்பி., இல்லாத தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி-வானதி சீனிவாசன்

எம்பி., இல்லாத தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி-வானதி சீனிவாசன்
X

பாஜகவிற்கு தமிழகத்தில் 1 எம்.பி கூட இல்லாத நிலையில் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருடன் பட்ஜெட் விளக்க கலந்துரையால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பட்ஜெட் அனைத்து துறை மற்றும் மக்களின் வளர்ச்சியை முன்வைத்து உருவாகியுள்ளது.அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டிய காரணத்தால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளை விடுவிக்கிறோம். தனியாருக்கு விற்பனை செய்வதால் வேலைவாய்ப்பு பெருகுகிறது. பங்குகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். நிறுவனத்தை மொத்தமாக தனியாருக்கு வழங்குவதில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே மூன்று விவசாய சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அதையும் விடுவதில்லை, கடனும் வழங்கக்கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிப்பது முரணாக உள்ளது.பாஜகவிற்கு தமிழகத்தில் 1 எம்.பி கூட இல்லாத நிலையில் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!