அப்பாடா, கொஞ்சம் ஆறுதல்! திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்தது

அப்பாடா, கொஞ்சம் ஆறுதல்! திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்தது
X
ஒரு வாரத்திற்கு பிறகு, திருப்பூரில் கொரோனா பாதிப்பு 1500-க்கு கீழ் சென்றிருப்பது, பொதுமக்களை கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு 1500 க்கு மேல் இருந்து வந்தது. தொற்று பரவல் அதிகரித்தன் காரணமாக, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1496, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று ஒரே நாளில் 17 பேர் இறந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 59 ஆயிரத்து 563 பேர், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 41, ஆயிரத்து 65 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 18, ஆயிரத்து 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம், 463 பேர் இறந்து உள்ளனர். இருப்பினும், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி இருப்பது, திருப்பூர் மாவட்ட மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!