கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு

கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டம்  அமைச்சர்கள் பங்கேற்பு
X
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்,கூட்டத்தில் கொரோனா முன் எச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முன் எச்சரிக்கைகள் சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான போதிய படுகைகள் வசதிகள் செய்ய வேண்டும், தனியார் மருத்துவனையில் கொரோனாவுக்கு சிச்சை அளிக்க அரசு காப்பீடு அட்டை ஏற்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் திருப்பூர் எம்பி. சுப்பராயன், எம்எல்ஏ.,கள் செல்வராஜ், ஆனந்தன், விஜயகுமார், மகேந்திரன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், எஸ்பி திஷாமித்தல், டிஆர்ஓ சரவணமூர்த்தி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!